தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாயில் நுரையுடன் மெடிக்கல் முன்பு மயங்கி விழுந்த நபர்.. தஞ்சையில் நடந்தது என்ன? - மருந்தகம் மும்பு ஒருவர் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே மருந்தக வாயிலில் வாயில் நுரையுடன் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மருந்தக வாயிலில் ஒருவர் உயிரிழப்பு
மருந்தக வாயிலில் ஒருவர் உயிரிழப்பு

By

Published : Jan 21, 2023, 11:24 AM IST

மருந்தக வாயிலில் ஒருவர் உயிரிழப்பு

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம் அணைக்கரையை அடுத்துள்ள செருகடம்பூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் (44 ) நேற்று (ஜன 20) இரவு கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவில் உள்ள காவேரி மருந்தகத்தில் மருந்து வாங்கச் சென்ற போது கடை வாசலில் மயங்கி கீழே விழுந்து மூக்கு மற்றும் வாயில் நுரை தள்ளியவாறு உயிரிழந்தார்.

இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மாரியப்பனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற மாரியப்பனின் உறவினர்கள், மயங்கி விழுந்தவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என்று காவேரி மருந்தக உரிமையாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக மருந்தகம் மூடப்பட்டது. பின்னர் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: +2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு.. டெல்லி கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details