தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (55). இவர் இந்திராகாந்தி சாலையில் உள்ள ஒரு மருந்துக் கடை ஒன்றில் கூலித் தொழிலாளியாக பணியாற்றிவந்தார்.
இவரது மனைவி சபிதாவிற்கும் (48), இவருக்கும் 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், குழந்தை இல்லை என்பதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
போதிய வருமானம் இல்லாத காரணத்தால் குடும்பம் நடத்த முடியாமலும் கணவன் மனைவி இருவரும் இருந்துள்ளனர். இதற்கிடையில் இன்று (ஆகஸ்ட் 27) அதிகாலை விஜயன் வீட்டிலிருந்து அம்மி குழவி கல்லை எடுத்து சபிதாவின் தலையில் போட்டார். இதில் காயமடைந்த சபிதா சம்பவ இடத்திலே உயிரிழந்தார்
மனைவியை கொலைசெய்ததால் மனமுடைந்த விஜயன், வீட்டிலிருந்து மண்ணெண்ணெய் எடுத்து தீ குளித்து அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து விஜயனின் அண்ணன் ராமச்சந்திர கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர், தம்பதியின் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க... வாடகை பிரச்னையில் தீக்குளித்த சம்பவம்: சிசிடிவி காட்சி வெளியீடு!