தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி மஞ்சுளா (திமுக) விட்டலூர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.
மனோகரனின் உறவினர் திருச்சியைச் சேர்ந்த அஞ்சம்மாள் என்பவரிடம் இருந்து இரண்டரை ஏக்கர் நிலத்தில் மனோகரன் தற்போது நெல் நடவு செய்திருந்தார். அந்த நிலத்தை அஞ்சம்மாள், அதே ஊரைச் சேர்ந்த ரெமோ என்பவரிடம் விற்பனை செய்துவிட்டார்.
இந்நிலையில், நிலத்தை வாங்கிய ரெமோ இரு தினங்களுக்கு முன்பு நிலத்தில் அறுவடை செய்ய முயன்றபோது மனோகரன் தரப்பினருக்கும் ரெமோ தரப்பினருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது.
இதுகுறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், ரெமோ தரப்பினர் நாகை மாவட்டம், மூலங்குடியைச் சேர்ந்த காளிமுத்துவிடம் (53) அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு எடுத்துவந்து அறுவடை செய்ய முயன்றபோது சாகுபடி செய்திருந்த மனோகரன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுள்ளார்.