தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துபாயில் கிளாசிக்கல் டான்ஸுக்கு நல்ல வரவேற்பு - பரதநாட்டிய கலைஞர்கள் பெருமிதம்! - Maha Shivaratri Natyanjali complete

தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி துபாய் நாட்டிலும் கிளாசிக்கல் நடனத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதாக துபாய் நாட்டு பரதநாட்டிய கலைஞர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 25, 2023, 11:24 AM IST

துபாயில் கிளாசிக்கல் டான்ஸுக்கு நல்ல வரவேற்பு - பரதநாட்டிய கலைஞர்கள் பெருமிதம்!

தஞ்சாவூர்:உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் நேற்றுடன் (பிப்.24) நிறைவு பெற்ற நாட்டியாஞ்சலி விழாவை ஏராளமான இசை ரசிகர்கள் கண்டு ரசித்தனர். தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம், ப்ரகன் நாட்டியாஞ்சலி பவுன்டேசன் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் ப்ரகன் நாட்டியாஞ்சலியின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் மஹாசிவராத்திரியான 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தன.

தொடர்ந்து, 7 நாட்கள் நடைபெற்ற இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து 51 குழுக்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்குபெற்று பெரிய கோயிலில் உள்ள நந்தி மண்டபத்தில் இசை நாட்டிய அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியின் நிறைவு நாளாக நேற்று துபாய் நாட்டை சேர்ந்த கிளாசிக்கல் ரிதம்ஸ் குரு - ரோகினி ஆனந்த் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.

இதுகுறித்து பேசிய துபாய் நாட்டை சேர்ந்த பரதநாட்டிய கலைஞரான ரோகிணி ஆனந்த், 'தஞ்சாவூர் பெரிய கோயிலில் பரத நாட்டியம் ஆடி இசை அஞ்சலி செலுத்துவது தங்களது பாக்கியம் என்றும் இந்த மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும் கூறினார். மேலும், துபாய் நாட்டில் கிளாசிக்கல் டான்ஸுக்கு வாய்ப்புள்ளது என்றாலும், இங்கு வந்து நடனம் ஆடியது மிகப்பெரிய சந்தோஷம் என்றார்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரதநாட்டியம் ஆடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் இதனை விரும்பும் தமிழ் மக்கள், மொழி புரியவில்லையென்றாலும் சொல்வதைக் கேட்டு அவர்கள் புரிந்து கொள்கின்றனர்' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘பயிர் உயிர் இல்லையா..’ டிராக்டர் ஏற்றி பயிர்களை அழித்த வருவாய்த் துறையினர்!

ABOUT THE AUTHOR

...view details