தஞ்சாவூா் மாவட்டம் கீழவாசல், பகுதியைச் சோ்ந்தவா் ஜி. மாஸ்கோ (45). கள்ளச் சாராய வியாபாரியான இவர் மீது ஜந்திற்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனால் இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு வழங்க பரிந்துரை செய்துள்ளார்.