தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது! - போலீசார் விசாரணை,

தஞ்சாவூர்: பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள மதுபானக் கடை அருகே போலி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவரை மதுவிலக்கு அமல் பிரிவினர் கைது செய்தனர்.

போலி மதுபாட்டில்கள் பறிமுதல்

By

Published : Oct 6, 2019, 6:04 PM IST

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள மதுபானக் கடை அருகே போலி மது பாட்டில்கள் மற்றும் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், நவநீதகிருஷ்ணன், சந்தானம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பாண்டிச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட கலப்படமான 251 மது பாட்டில்கள் மற்றும் 56 பீர் பாட்டில்கள் என மொத்தம் 307 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் வடக்கு வாசலைச் சேர்ந்த முத்துக்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும், தலைமறைவான இருவரும் ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details