காவல் துறை ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான தனிப்படையினர் இன்று காலை முதல் மூன்று பார்களுக்குச் சென்று பூட்டை உடைத்து மூன்று பார்களிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
பார்களை உடைக்கும் போது எந்த பார்களிலும் ஊழியர்கள் இல்லை. இந்நிலையில் பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் நகரில் திருட்டுத்தனமாக ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பாட்டில்களை யார் விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.