தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி

தஞ்சையில் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

ஆக்சிஜன் செரிவூட்டி
ஆக்சிஜன் செரிவூட்டி

By

Published : Jun 19, 2021, 10:30 PM IST

தஞ்சாவூர்:பட்டுக்கோட்டை நகராட்சியிலுள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டு, ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், லயன்ஸ் சங்கங்கள் சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் இன்று (ஜுன் 19) ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், லயன்ஸ் சங்க மாவட்டம் மற்றும் கிளை நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையை ஆய்வுசெய்த ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details