திருக்காட்டுப்பள்ளியில் இன்று திருவையாறு தொகுதி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான இல.கணேசன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “சமீபகாலமாக தெய்வங்கள், தாய்மார்களை இழிவாக பேசுவதும், பிரிவினைவாதமும் தலைதூக்கியுள்ளது. தமிழ்நாடு வளர்ச்சிபெறக் கூடாது என்று, இந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வன்முறைகள், போராட்டங்களை தூண்டிவிட்டவர்கள் திமுகவினர். அதற்கு உதாரணமாக முருகனை கேவலப்படுத்திய கருப்பர் கூட்டத்தில் ஒருவருக்கு போட்டியிட இடம் வழங்கியுள்ளது திமுக. அதுபோல் ஆசிரியர்கள் போராட்டம் என்ற பேரில் வன்முறையில் ஈடுபட்ட ஒரு பெண்ணுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தேச விரோதச் செயல்.
மகாபாரத அர்ஜுனன் போன்றவர் எடப்பாடி பழனிசாமி - இல.கணேசன் - இல.கணேசன்
தஞ்சாவூர்: அதிமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு எல்லாம் தேர்தலில் போட்டியிட திமுக இடமளித்துள்ளதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ganesan
மகாபாரத அர்ஜுனன் போன்று எடப்பாடி உள்ளார். ஆனால், அதர்மத்திற்கு தலைமை ஏற்றுள்ளார் ஸ்டாலின். இந்த தேர்தலில் தர்மம் காக்க அதிமுக ,பாரதிய ஜனதா கூட்டணிகட்சிக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத் வருகையை ஒட்டி அனுமதியின்றி நடந்த வாகனப் பேரணி: பாஜகவினர் மீது வழக்குப்பதிவு