தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவை சபாநாயகர் பற்றி அவதூறு - 2 பேர் கைது - pollatchi news

முகநூலில் சட்டப்பேரவை சபாநாயகர் பற்றி அவதூறு பரப்பிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

முகநூலில் சட்டப்பேரவை சபாநாயகர் பற்றி அவதூறு - 2 பேர் கைது
முகநூலில் சட்டப்பேரவை சபாநாயகர் பற்றி அவதூறு - 2 பேர் கைது

By

Published : Mar 14, 2021, 12:23 PM IST

பொள்ளாச்சி- மார்ச்-14ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஆணையம் அறிவித்ததின் பேரில் திமுக மற்றும் அதிமுகவினர் தேர்தலில் பணியாற்ற பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து, வாட்ஸ்அப் முகநூல் பக்கங்களில் தங்கள் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களை கவரும் விதமாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அதிமுக கோவை புறநகர் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த சதீஷ்குமார் புகாரின் பேரில் முகநூலில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஜெயராமன் அவர்களை தவறாக சித்தரிப்பதாக கூறி திமுக கோவை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் பட்டீஸ்வரன் மற்றும் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பகுதியை சேர்ந்த தாஸ் பிரபு கிழக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து, முகநூலில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பற்றிய அவதூறு செய்தி பரப்பிய இருவர் கைது செய்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தேர்தல் UPDATES : அதிமுக ஆட்சியை நிலைநிறுத்தியது பாஜக தான் - கடம்பூர் ராஜூ

ABOUT THE AUTHOR

...view details