அண்மையில் திருவாரூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில், நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையைப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதற்கு முன்பே கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க பரிசீலனை நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது ஏமாற்றமளிப்பதாகக் கூறி, வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து, நீதிமன்ற வாயில் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் மேலும், வழக்கறிஞர்கள் கூறுகையில், 2013ஆம் ஆண்டிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கவில்லை என்றால், பொதுமக்களையும் ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மது இனி நாட்டுக்கு கேடில்லை...