தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லலிதா ஜுவல்லரி திருட்டு வழக்கு: பாராட்டு மழையில் காவலர்கள்!

தஞ்சாவூர்: லலிதா ஜுவல்லரி திருட்டு வழக்கில் தொடர்புள்ள நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்ட காவலர்களைப் பாராட்டி மத்திய மண்டல ஐஜி சான்றிதழ் வழங்கியுள்ளார்.

police appreciated

By

Published : Oct 4, 2019, 7:14 PM IST

திருவாரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாரதிநேரு தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், இளங்கோ, காவலர்கள் காமராஜ், ரவி, முதல் நிலை காவலர் சுந்தரராமன், காவலர் ரகுவரன் ஆகியோர் விளம்பல் பகுதியில் கடந்த 3ஆம் தேதி இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியான நபரைக் கைது செய்து விசாரித்ததில், அவருக்கு திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்பிருப்பது தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் சம்பந்தப்பவர்களை காவல் துறையினர் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர்.

இதையடுத்து, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவரை பிடிக்க உதவியாக இருந்து, சிறப்பாக பணிபுரிந்தமைக்காக அக்காவல் துறையினருக்கு தஞ்சாவூரில் மத்திய மண்டல ஐஜி வரதராஜ் தலைமையில், டிஐஜி லோகநாதன், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் பாராட்டி வெகுமதியும், நற்சான்றிதழையும் வழங்கினர்.

இதையும் படிங்க: தமிழ் பட ட்ரெய்லரைப் பார்த்து 'வாவ்!' என மிரண்ட பாலிவுட் நடிகர்

ABOUT THE AUTHOR

...view details