தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்த ஏராளமான மரங்கள் கஜா புயலால் முற்றிலும் வேரோடு சாய்ந்தன. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, கடற்கரையை ஒட்டி இருப்பதால் அங்கு புயல் சேதம் அதிகமானது. கஜா புயலால் 90 விழுக்காடு மரங்கள் விழுந்த நிலையில், தற்போது வறண்ட நிலமாக பட்டுக்கோட்டை காணப்படுகிறது.
கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்க 'குறும் காடுகள்' வளர்ப்பு திட்டம் - டெல்டா மாவட்டங்கள் பாதிப்பு
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுத்து இயற்கை வளத்தை பாதுகாக்க 'குறும் காடுகள்' வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பாக பட்டுக்கோட்டையில் 'குறும் காடுகள்' வளர்ப்பு திட்டத்தின் மூலம் மரங்களை வளர்க்க முடிவு செய்து இன்று (அக்டோபர் 17) அழகிரி மணிமண்டபத்தில் இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது. இதையொட்டி, முதற்கட்டமாக 10 ஆயிரம் சதுர அடியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வை ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் பாலாஜி பாபு தொடக்கி வைத்தார்.
இதில் ஏராளமான ரோட்டரி சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து குறுங்காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் மூலமாக காடுகள் வளர்க்கும் பணி விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.