தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 5:26 PM IST

Updated : Jan 11, 2024, 10:22 PM IST

ETV Bharat / state

அனுமன் ஜெயந்தி: கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்குச் சிறப்புப் பூஜை.. ஏராளமான பக்தர்கள் வழிபாடு!

Hanuman Jayanti: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, கும்பகோணத்தில் உள்ள 9 அடி உயரம் கொண்ட விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு தங்க கவசம், 1008 வடை மாலை அணிவித்துச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

kumbakonam-special-pooja-to-jayamaruthi-anjaneya-swamy-many-devotees-dharsan
அனுமன் ஜெயந்தி: கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்குச் சிறப்புப் பூஜை.. ஏராளமான பக்தர்கள் வழிபாடு!

அனுமன் ஜெயந்தி: கும்பகோணம் ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்குச் சிறப்புப் பூஜை.. ஏராளமான பக்தர்கள் வழிபாடு!

தஞ்சாவூர்: அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம். புத்தி, கீர்த்தி, பலம், தைரியம், மனோ சக்தி ஆகியவற்றை அருள்பவர், வரம் அருளும் மூர்த்தி. வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருளும் வரப்பிரசாதி இவர் என்பதால் இவருக்கு பிரார்த்தனைகள் அதிகம்.

கிரக தோஷம் நீங்க இவருக்கு வடை மாலை சாற்றியும், கல்வியில் தடை, சுணக்கம் நீங்க வெற்றிலை மாலை சாற்றியும், பிரிந்த தம்பதியினர் சேர தேங்காய் மாலையும், தடைகள் நீங்கி உயர் பதவி அடையத் துளசி மாலை சாற்றியும், தீராத நோய் தீர வெண்ணெய் காப்பு சாற்றியும், குழந்தைப் பேறு கிட்டச் சந்தனக் காப்பும் சாற்றி வழிபடுவது முக்கிய பிரார்த்தனைகள் ஆகும்.

இத்தகைய பெருமை கொண்ட ஆஞ்சநேயரைப் போற்றி வணங்கும் வகையில், கும்பகோணம் பாலகரையில் 9 அடி உயரம் கொண்ட விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், தேவையான அளவிற்கு நல்லமழை பெய்து, வேளாண் பொருட்கள் அமோக விளைச்சல் காணவும், அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெற மார்கழி மாத மூல நட்சத்திரத்துடன் கூடிய அமாவாசை தினமான இன்று (ஜன.11) விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதில் தங்கக் கவச அலங்காரத்தில், 1008 வடை மாலை மற்றும் 1008 வெற்றிலை மாலையுடன், அருள்பாலிக்க, இரு கடங்களில் புனித நீர் நிரப்பி, 108 விதமான பொருட்களைக் கொண்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து இதன் பூர்ணாஹதிக்கு பிறகு மூலவர், உற்சவர் மற்றும் விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கும், சம்போர்ச்சனம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிறப்புப் பூஜைகளுடன், திரிசதி மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும் 1001 முறை ராம நாம ஜெபமும் கூற, சிறப்புப் பூஜைகளுடன், குங்குமம் மற்றும் உதிரிப்பூக்களைக் கொண்டு அர்ச்சனைகள் செய்த பிறகு பஞ்சார்த்தி காட்டி, 16 விதமான சோடஷ உபசாரமும் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இத்தலத்து ஆஞ்சநேய சுவாமியிடம் தங்களது வேண்டுதலை வெள்ளைத் தாளில் எழுதி அதனை மட்டை தேங்காயுடன் சிவப்பு நிறத்துணியில் கட்டி அமாவாசை பூஜையில் வைத்து பிரார்த்தனை மேற்கொண்டால் எண்ணிய காரியம் மூன்று அமாவாசை காலங்களுக்குள், அதாவது 90 நாட்களில் முழுமையான நிறைவேறும் என்பது அனுமன் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:சர்ச்சைக்குரிய காட்சி விவகாரம்.. நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட அன்னபூரணி - ஜீ விளக்கம் என்ன?

Last Updated : Jan 11, 2024, 10:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details