தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆறு சிவாலயங்களில் வரும் மார்ச் 8ஆம் தேதி மாசிமகப் பெருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி சிவாலயங்களில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமிகளின் திருவீதியுலா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் ஆலயம், ஸ்ரீவியாழ சோமேஸ்வரர், ஸ்ரீகாசி விஸ்வநாதர் உள்ளிட்ட சிவாலயங்களில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஓலைச் சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருளினார்கள்.