தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அதில், 94 குழந்தைகள் சம்பவ இடத்திலே உடல் கருகி இறந்தனர். இந்த தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் நினைவு நாள் ஆண்டு தோறும் ஜூலை 16ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 16ஆம் ஆண்டு நினைவு தினம்! - Kumbakonam school fire accident
தஞ்சாவூர்: கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இறந்த 94 குழந்தைகள்
அதையொட்டி, குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள், சம்பவம் நடந்த பள்ளி முன்பு மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலை வைத்தும், மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க:நீலகிரி வெலிங்டன் கன்டோன்மென்ட் மருத்துவமனை மூடல்!