தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது போற்றக்கூடியது சாரங்கபாணி திருக்கோயில். இது ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருக்கோவிலில் மூர்த்தி தலம் தீர்த்தம் மற்றும் திருத்தேர் திருவாபுராணம் ஆகிய அனைத்துமே பாடல் பெற்ற விளங்குவது வரலாற்றுச் சிறப்புடையது.
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரை தேரோட்டம்! - kumbakonam
தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றதையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
இத்திருத்தலத்தில் இருகரத்துடன் எழந்தருளியுள்ள மூலவர் ஸ்ரீ ஆராவமுதனை ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் என்றும் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கும் உற்சவரை நாற்றோளெந்தாய் என்றும் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தமையால் இத்திருத்தலம் உபயபிரதான திவ்யதேசம் என்று அழைக்கப்படுகிறது.
சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் திருவிழா கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான இன்று பெரிய திருதேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் சாரங்கராஜா ஸ்ரீதேவி பூமிதேவி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.