தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பகோணத்தில் அதிகாலை முதலே பலத்த கனமழை... 3 மணி நேரத்தில் 101 மி.மீ பதிவு... - ம்பகோணம் மற்றும் அதன்சுற்று வட்டாரப்பகுதி கனமழை

கும்பகோணம் மற்றும் அதன்சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை 3 மணி நேரம் பெய்ததால் 600 ஏக்கர் விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது.

3 மணி நேரத்தில் 101மி.மீ பதிவு- கும்பகோணத்தில் அதிகாலை முதலே பலத்த கனமழை!
3 மணி நேரத்தில் 101மி.மீ பதிவு- கும்பகோணத்தில் அதிகாலை முதலே பலத்த கனமழை!

By

Published : Sep 27, 2022, 8:14 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று(செப்.27) அதிகாலை இடி மின்னலுடன் 3 மணி நேரத்திற்கு பலத்த மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக கும்பகோணத்தில் 101 மி.மீ மழை பதிவானது.

கும்பகோணத்தில் அதிகாலை முதலே பலத்த கனமழை

இதனால் கல்லூர், கடிச்சம்பாடி, திருநல்லூர், அகராத்தூர், வாளாபுரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் ஏறத்தாழ 600 ஏக்கர் விளைநிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இங்கு 2 வாரங்களுக்கு முன்பே பயிர்கள் நடப்பட்டன. ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் இப்போது நஷ்டத்துடன் இருக்கிறோம் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:ஃபார்மாலிட்டியாக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கம் - கடுப்பாகி கிளம்பிய அமைச்சர் மா.சு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details