கோயில் நகரமான கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அட்சய திருதியை அன்று பெரியகடை வீதியில் அனைத்து பெருமாள் ஆலயங்களும் கருட சேவை நடைபெறுவது வழக்கம்.
12 ஆலயங்களில் கருட சேவை - திருவிழாக்கோலம் பூண்ட கும்பகோணம்! - ஒரே நாளில் 12 கருட சேவை
தஞ்சாவூர்: அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணம் பெரியகடை வீதியில் பன்னிரெண்டு வைணவ ஆலயங்களில் கருடசேவை நடைபெற்றது.
12 ஆலங்களில் கருட சேவை
அந்த வகையில், நேற்று அட்சய திருதியை முன்னிட்டு பெரியகடை வீதியில் ஒரே இடத்தில் சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, ஆதிவராகர், கிருஷ்ணர், பட்டாபிராமன், ராஜ கோபாலன், வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட பன்னிரெண்டு பெருமாள்களின் கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஒரே இடத்தில் பன்னிரெண்டு வைணவ ஆலயங்களில் கருடசேவை நடைபெற்றதையொட்டி கும்பகோணமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.