தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எடியூரப்பாவின் உருவ பொம்மையை காவிரி ஆற்றில் மிதக்கவிட்ட விவசாயிகள்! - tanjore farmers protest

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவை கண்டித்து அவரது உருவ பொம்மையை ஆற்று நீருக்குள் அழுத்தி விவசாயிகள் கண்டனம் கோஷமிட்டு ஆர்பாட்டம் நடத்தினர்.

கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்பாட்டம்
கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்பாட்டம்

By

Published : Jun 21, 2021, 11:16 PM IST

Updated : Jun 22, 2021, 7:46 AM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுவாமிமலை சுந்தர சுவாமிநாதன் தலைமையில், ஏராளமான விவசாயிகள் கும்பகோணம் காவேரி ஆற்றுக்குள் இறங்கி கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தினர்.

அப்போது, கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணைக் கட்டி தண்ணீரை திருட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல்பாட்டை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு அனைத்து விவசாய பிரதிநிதிகளுடன் நேரில் சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

எடியூரப்பாவின் உருவ பொம்மையை காவிரி ஆற்றில் மிதக்கவிட்ட விவசாயிகள்!

மேலும், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவை கண்டித்து, அவரது உருவ பொம்மையை ஆற்றுக்குள் அழுத்தி, அவரை எதிர்த்து கோஷமிட்டவாறே காவிரி ஆற்றில் மிதக்கவிட்டு தங்கள் கண்டத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மின்னஞ்சல் மூலமாக அவர்களின் கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: WTC FINAL: மழைக்கு பலியான நான்காம் நாள் ஆட்டம்; கைவிட்டுப்போகுமா கோப்பை?

Last Updated : Jun 22, 2021, 7:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details