தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைமுக பருத்தி ஏலம் - பெரிய வாகனங்களில் குவிந்த விவசாயிகள் - தஞ்சாவூர் பெரிய வாகனங்களில் குவிந்த விவசாயிகள்

தஞ்சாவூர்: கொட்டையூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனையகத்தில் நடைபெறயுள்ள மறைமுக பருத்தி ஏலத்திற்கு விவசாயிகள் பெரிய வாகனங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

பெரிய வாகனங்களில் குவிந்த விவசாயிகள்
பெரிய வாகனங்களில் குவிந்த விவசாயிகள்

By

Published : Jul 14, 2020, 9:36 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பருத்தி பஞ்சுக்கான அறுவடை காலம் ஜுன், ஜூலை மாதங்களில் நடைபெறும். பருத்திகளை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மறைமுக பருத்தி ஏலம் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க அரசு வழிவகை செய்துள்ளது.

கும்பகோணம் கொட்டையூர் பகுதியில் உள்ள வேளாண் ஒழங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம் வாரம்தோறும் புதன்கிழமை நடைபெறுகிறது. விவசாயிகளின் பருத்திகளை அதன் அலுவலர்கள் எடைபோட்டு அதற்கான பணத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துகின்றனர்.

கடந்த ஆண்டு பருத்தி குவிண்டாலுக்கு 5,750 வரை விவசாயிகளுக்கு கிடைத்தது. தற்போது கரோனா ஊரடங்கால் ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் குறைந்த அளவிற்கே பருத்திகள் விலை போகின்றது.

இதனிடையே கொட்டையூர் வேளாண் ஒழங்குமுறை விற்பனையகத்தில் கடந்த வாரம் விற்பனைக்கு ஏற்றி வந்த லாரிகள் ஊரடங்கால் வெளியே செல்லாமல் உள்ளது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான மறைமுக பருத்தி ஏலத்திற்கு விவசாயிகள் பருத்திகளை ஏற்றிக் கொண்டு அதிகளவில் வந்தனர்.

இதனால் கீழகொட்டையூர், மேலக்கொட்டையூர், கொட்டையூர் புறவழிச்சாலை ரவுண்டனா முதல் அசூர் புறவழிச்சாலை ரவுண்டனா வரை ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். ஊரடங்கால் பணம் இல்லாமல் தவிக்கும் விவசாயிகள் எப்படியாவது பருத்திகளை எடை போட்டுவிடவேண்டி வேளாண் ஒழங்குமுறை விற்பனையகம் முன் தஞ்சம் அடைந்துள்ளனர்.

தற்போது தஞ்சாவூரில் மழை பெய்வதால் பருத்தி சேதமடையும் நிலையில் உள்ளது. விவசாயிகளும் மழையில் நனைந்தவண்ணம் உள்ளனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பஞ்சு குடோனில் தீ விபத்து...! பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம்

ABOUT THE AUTHOR

...view details