தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாட்டுக்கறி திருவிழாவிற்கு முகநூலில் அழைப்பு! - Facebook

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாட்டுக்கறி திருவிழாவுக்கு முகநூலில் அழைப்பு விடுத்ததாகக் கூறி தமிழ்நாடு குடியரசுக் கட்சி நிர்வாகி எழிலன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

beef-issue

By

Published : Jul 16, 2019, 7:48 PM IST

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள கள்ளப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன் (26) கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தில் ஜூலை 13ஆம் தேதி புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில், செட்டிமண்டபம், வெங்கடேசா நகரைச் சேர்ந்தவரும் தமிழ்நாடு குடியரசுக் கட்சியின் நிர்வாகியுமான எழிலன் அவரது முகநூலில் மாட்டுக்கறி திருவிழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், இது மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகவும் உள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும் சுரேந்திரன் கூறியுள்ளார்.

இதன் பேரில் எழிலன் மீது கும்பகோணம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details