தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தில் உள்ளது புனித பாத்திமா ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள மேரிமாதா சிலை கடந்த ஒருவாரத்திற்கு முன்பு உடைந்த நிலையில் கிடந்தது. இதை பார்த்த ஆலய நிர்வாகி சார்லஸ் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
தேவாலயத்தின் மீது தாக்குதல்- இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை
தஞ்சை: தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புகாரின் பேரில் பேராலயத்திற்கு வந்த காவல்துறையினர் உடைந்து கிடந்த சிலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று அதிகாலை ஆலயத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதாக மீண்டும் ஆலய நிர்வாகி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.