தஞ்சாவூர்: கிருஷ்ண ஜெயந்தி 35ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அன்னிபெஸன்ட் அரங்கில் மழலையர் பள்ளி மாணவ மாணவியர்களிடையே மாறுவேடப்போட்டி நேற்று (ஜூலை 23) நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் வரை நல்லொழுக்கம், தேசபக்தி, தெய்வபக்தி ஆகியவற்றை வளர்க்கும் விதமாக போட்டிகள் நடத்தப்படும்.
கும்பகோணத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா; மாறுவேடம் தரித்து குழந்தைகள் அசத்தல் மாறுவேடப்போட்டி, ஓவியப்போட்டி, பகவத் கீதை ஒப்புவித்தல் போட்டி, விஷ்ணுசகஸ்ரநாமம் ஒப்புவித்தல் போட்டி, பரதநாட்டியம், குழுநடனம், பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி என பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான குழந்தைகள் பாரதியார், திருவள்ளுவர், ஸ்ரீ கிருஷ்ணர், ராமர், அனுமன், மீராபாய் உள்ளிட்ட பலவிதமான திருவுருவங்களில் மாறுவேடமிட்டு தங்களது கருத்துக்களை அழகிய மழலை மொழியில் எடுத்து வைத்து பார்வையாளர்களை அசத்தி அற்புதங்கள் செய்தனர். அதில் சிறந்த பங்காற்றிய குழந்தைகளை தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:தண்ணீரில் மிதந்து செஸ் விளையாடி விழிப்புணர்வு