தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொள்ளிடம் வெள்ளப்பெருக்கு: நீரில் மூழ்கிய பயிர்கள் : விவசாயிகள் வேதனை! - தமிழ்நாடு அரசு

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு கிராமங்களில் குறுவை சாகுபடி பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கொள்ளிடம் வெள்ளப்பெருக்கு: குறுவை சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை!
கொள்ளிடம் வெள்ளப்பெருக்கு: குறுவை சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை!

By

Published : Aug 8, 2022, 9:16 AM IST

தஞ்சாவூர்: கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தினால், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் உள்ளிக்கடை புத்தூர், குடிகாடு, கூடலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் நூறு ஏக்கருக்கும் மேலான குறுவை சாகுபடி செய்யப்பட்ட இளம் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

அதேநேரம் இந்த குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யாத நிலையில் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாத வேதனையில் உள்ளனர். மேலும் கொள்ளிடத்தில் தற்போது வரை அதிக நீர் செல்வதால், உடனடியாக தண்ணீர் குறைய வாய்ப்பில்லை.

கொள்ளிடம் வெள்ளப்பெருக்கு: குறுவை சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை!

ஆற்றில் தண்ணீர் குறைந்தால்தான், இங்குள்ள வயல்களில் உள்ள வெள்ள நீர் வடிய வாய்ப்பு கிடைக்கும். அதற்கு மேலும் சில நாட்கள் பிடிக்கும் என்பதால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அரசு அலுவலர்கள், பாதிக்கப்பட்ட நிலப்பரப்புகளை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கி தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு..! அடித்துச் செல்லப்பட்ட பசுமாடு..!

ABOUT THE AUTHOR

...view details