தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரபோஜியின் 243ஆவது பிறந்தநாள் விழா: மாலை அணிவித்து மரியாதை! - King Saraboji

தஞ்சையை ஆண்ட மாமன்னர் சரபோஜியின் 243ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

King Saraboji birth anniversary celebrated in Tanjore
King Saraboji birth anniversary celebrated in Tanjore

By

Published : Sep 24, 2020, 8:07 PM IST

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரான சரபோஜி மகாராஜாவின் 243ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, தஞ்சை அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள கலைக்கூடம் நாயக்கர் கொலு மண்டபத்தில் உள்ள பளிங்கு சிலையிலான சரபோஜி மன்னரின் முழு உருவச்சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சரபோஜியின் 243ஆவது பிறந்தநாள் விழா: மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

மாவட்ட ஆட்சியரைத் தொடர்ந்து மன்னரின் வாரிசுகள், கலைக்கூடம், சரஸ்வதி மகால் நூலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் ஆகியோர் மாலை அணிவித்து சரபோஜி மன்னருக்கு மரியாதை செய்தனர்.

இதையும் படிங்க...திமுக நிர்வாகி வீட்டில் சிபிஐ விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details