தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே மேப்பத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் பாரம்பரிய உணவுகளை பறைசாற்றும் வகையில் 'பூர்வகுடி உணவு திருவிழா' நடத்தப்பட்டது. அதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக கள ஆய்வு விடுதியின் சார்பாக செய்யப்பட்டுள்ளது. சோழநாடு, கொங்கு நாடு, பாண்டிய நாடு, நடு நாடு மற்றும் தொண்டை நாடு ஆகிய ஐந்து மண்டலங்களின் உணவு வகைகள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
இத்திருவிழா செப்.22 ஆம் தேதி முதல் அக்.9 ஆம் தேதி வரை தொடர்ந்து 18 நாட்களுக்கு நடைபெறுகிறது. நாள்தோறும் 45 விதமான சைவ, அசைவ உணவுகள் கிரைண்டர், மிக்சி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவை இல்லாமல் இயற்கை வேளாண்மை மூலம் விளைவித்த காய்கறிகள் மூலம் செய்யப்படுகின்றன. இரவு 07.30 மணி முதல் 09.30 மணி வரை வழங்கப்படுகிறது. இதில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு ருசியான உணவு வகைகளை உண்டு பாராட்டி வருகின்றனர்.