தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீவிரப்படுத்தப்பட்ட குறுவை சாகுபடிப் பணிகள் - குறுவை சாகுபடிக்கான விவசாய பணிகள்

தஞ்சாவூர் : குறுவை சாகுபடிக்கான விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Kharif crops Cultivation Works Intensified
Kharif crops Cultivation Works Intensified

By

Published : Jun 23, 2020, 7:09 PM IST

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர், கல்லணை கால்வாயை வந்தடைந்ததை அடுத்து கடந்த 16ஆம் தேதி கல்லணையிலிருந்து மீண்டும் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில், குறுவை சாகுபடிக்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 43 ஆயிரத்து 225 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட நிலம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை 13 ஆயிரத்து 480 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட நிலத்தில் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர்.

குறுவை சாகுபடிக்குத் தேவையான உரங்கள் உள்ளிட்ட பொருள்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் மூலமும், தனியார் விற்பனை நிலையங்கள் மூலமும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் குறுவை சாகுபடி செய்ய சிரமப்பட்ட விவசாயிகள், இந்த ஆண்டு காவிரி நீர் திறந்து விடப்பட்டதால் மகிழ்ச்சியுடன் தங்களது விவசாயப் பணிகளை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க :தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details