தஞ்சையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கீழடி அகழாய்வு ஆராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை முன்பு எல்லாம் பெங்களூருவில் காட்சிப்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அவற்றை இங்கேயே காட்சிப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது .
பிற மாநிலங்களில் கீழடி பொருட்களை கண்காட்சிக்கு வைக்கும்போது அதனுடைய பாதுகாப்பு தன்மையின் நேர்மை கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் தற்போது இங்கேயே காட்சிப்படுத்துவது பாதுகாப்பாகவும் வருங்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும்.
உணவு, உடை, உறைவிடம் ஆகியவை மனிதனுக்கு இன்றியமையாதது என குன்றக்குடி அடிகளார் கூறியிருக்கிறார், இதைவிடுத்து கொள்ளைச் சம்பவங்களை எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராவை வைத்து நாடு முழுவதும் கண்காணிப்பின் மூலம் கட்டுப்படுத்த முடியாது. இதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.