தஞ்சாவூர்: கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நேற்று (அக்.25) கேதார கௌரி விரத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் சுவாமி சிலை முன்பு, ஏராளமான பெண்கள் பழங்கள், வெற்றிலை, பாக்கு, அதிரசம், புஷ்பம், மங்கல பொருட்களை வைத்து பூஜை செய்து வழிப்பட்டனர்.
அதன்பின் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், நோன்பு கயிறு உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது. கேதார கௌரி விரதம் என்பது ஆண்டின் ஒவ்வொரு புரட்டாசி மாதமும் வரும் 10ஆம் வளர்பிறை தசமி திதியான விஜயதசமி நாள் முதல் ஐப்பசி மாத அமாவசை திதி வரை என்று 21 நாட்களுக்கு கடைப்பிடிக்கப்படுகிறது.