உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் நோக்கில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி, தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, திரையரங்கங்கள், சுற்றுலாத்தலங்களை மூடுவதற்கும் உத்தரவிட்டுள்ளது.
கோவிட் -19 எதிரொலி: கல்லணை சுற்றுலாத்தலம் மூடல்
தஞ்சாவூர்: கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் பாதுகாக்கும் பொருட்டு கல்லணை சுற்றுலாத்தளம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடாமல் மூடப்பட்டுள்ளது.
கல்லணை சுற்றுலாத்தளம் மூடல்
இதன் காரணமாக, பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகளைப் பாதுகாக்கும் நோக்கில் சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கல்லணையும் மூடப்பட்டுள்ளது. கரிகாலன் பூங்கா, மணிமண்டபம், மேல்பூங்கா, விளக்கக்கூடம் ஆகியவை மூடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தெரிவித்தார். மறு உத்தரவு வரும் வரை, கல்லணை மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோவிட்-19: சார்க் நாடுகளுடன் பிரதமர் மோடி காணொளி சந்திப்பு