தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் சர்ச்சைக்குள்ளான திருவள்ளுவர் சிலைக்கு கி.வீரமணி மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வள்ளுவரைப் பொருத்தவரையில் அவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல, எந்த நாட்டுக்கும் உரியவர் அல்ல. உலகப் பொதுமறை என சொல்லக்கூடிய அளவுக்கு உலகத்துக்கே பொது ஒழுக்க நூலாக வள்ளுவரின் குறள் இருக்கிறது.
புத்தருக்குப் பிறகு அறிவையும், சாதி ஒழிப்பையும் முதன்மைப்படுத்தி, சமத்துவத்துக்கு முன்னுரிமைக் கொடுத்து மிகப் பெரிய அறிவுப் புரட்சியை உருவாக்கியவர் வள்ளுவர். அவர் உலக மக்களுக்கே சொந்தம், உலகத்துக்கே அறிவுரை சொன்னவர். அவருக்கு எந்தச் சாயமும் யாரும் பூசக்கூடாது. பூசினால் கலவரத்துக்கு வித்திடுகின்றனர் என்பதைப் புரிந்து கொண்டு, கட்டுப்பாடுடன் நம்மவர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதன் விளைவை அவர்கள் அறுவடை செய்வர்.