தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியளித்த ஜோதிகா - Thanjavur Government Hospital

தஞ்சாவூர்: அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கும், குழந்தைகள் வார்டை சீரமைப்பதற்கும் ஜோதிகா சார்பில் ரூ. 25 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

jyotika
jyotika

By

Published : Aug 8, 2020, 4:52 PM IST

Updated : Aug 9, 2020, 12:39 PM IST

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரையின் ஒப்புதலின் பேரில் அகரம் அறக்கட்டளை மூலம் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கும், குழந்தைகள் வார்டை சீரமைப்பதற்கும் ஜோதிகா சார்பில் ரூ. 25 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது, அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காக சேர்க்கப்படும் தாய், சேய் பத்திரமாக கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இதையடுத்து, தனது பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார் ஜோதிகா.

ரூ.25 லட்சம் நிதியளித்த ஜோதிகா

ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் ரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க...நடிகை ஜோதிகாவின் கேள்வியில் அர்த்தம் உள்ளது - கி.வீரமணி

Last Updated : Aug 9, 2020, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details