தஞ்சாவூர் :மகர்நோன்பு சாவடி பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரனின் மனைவி ராதிகா கிறிஸ்டியானா, திருச்சியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருகிறார்.
வழக்கம் போல் இவர் வேலை முடிந்து திருச்சியிலிருந்து தஞ்சைக்கு அரசு பேருந்தில் இன்று (நவ.06) சென்றுள்ளார். இந்நிலையில், தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி அவர் நகர் பேருந்துக்குச் செல்லும்போது தனது உடைமைகளை பரிசோதித்தபோது, தான் வைத்திருந்த 12 பவுன் நகை, செல்போன், 600 ரூபாய் பணம் ஆகியவை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.