தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சூர்யாவின் பேச்சு தற்குறித்தனமானது' - ஜீவஜோதி - சூர்யாவை விமர்சித்து பேசிய ஜீவஜோதி

தஞ்சாவூர்: நடிகர் சூர்யா போன்று தற்குறித்தனமாக பேசுபவர்களுக்கு பாஜக பதிலளிக்காது என தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜீவஜோதி தெரிவித்தார்.

சூர்யாவை விமர்சித்த ஜீவஜோதி
சூர்யாவை விமர்சித்த ஜீவஜோதி

By

Published : Sep 17, 2020, 10:52 PM IST

பிரதமர் மோடியின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் பாஜகவின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜீவஜோதி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட் தேர்வு என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். தேவையில்லாமல் தற்போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். திறமையான மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா போன்ற தற்குறித்தனமாக பேசுபவர்களுக்கு பாஜக பதிலளிக்காது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவி கூட தன்னுடைய இயலாமையை தான் எழுதி இருக்கிறாரே தவிர, நீட் தேர்வை பற்றி எதுவும் கடிதத்தில் எழுதவில்லை" என்று சூர்யாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார்.


இதையும் படிங்க; தோழரைப் போற்
று

ABOUT THE AUTHOR

...view details