கடந்த நான்காம் தேதி முதல் தமிழ்நாட்டில் சென்னை, கும்பகோணம், கோபிசெட்டிபாளையம், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் உலக விண்வெளி வாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் உலக விண்வெளி வார விழாவை, அம்மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
இஸ்ரோ எஸ்பிபியின் இணை இயக்குநர் ரெங்கநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், கல்லூரித் தாளாளர் திருநாவுக்கரசு, கல்லூரி முதல்வர் பாலமுருகன், சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியில் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பல்வேறு கருவிகளும் பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனைச் சுற்று வட்டாரத்திலிருந்து பல்வேறு பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.