தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள், விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை மட்டுமே தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளதாகவும், நகைக்கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
மும்முனை மின்சாரம் 24 மணி நேரமா? 6 மணி நேரமா? - டெல்டா விவசாயிகள்
தஞ்சாவூர்: 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு வெறும் 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைப்பதாக டெல்டா விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
delta
மேலும், விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், 6 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை எனவும், முதலமைச்சரின் அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க:திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்: உதயநிதி!