தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகரும் நியாய விலைக்கடை திட்டத்தினை இன்று, மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்தியலிங்கம் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மத்திய அமைச்சரவையில் இணைகிறதா அதிமுக? - வைத்தியலிங்கம் எம்பி பதில் - தஞ்சாவூர் செய்திகள்
தஞ்சாவூர்: மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பது தொடர்பாக முடிவு செய்யப்படவில்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
vaithiyalingam
தற்போது மழை பெய்துவருவதால் நெல் கொள்முதல் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டு வேகமாக நடைபெற்றுவருகிறது. கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் பெறுவது குறித்து எந்தப்புகாரும் வரவில்லை. அதுபோல் நடப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்“ எனக் கூறினார்.
இதையும் படிங்க: ”கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” - மாணிக்கம் தாகூர்