தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேசன் (கால்பந்து கூட்டமைப்பு) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான கால்பந்து தொடர் நடைபெறுவது வழக்கம்.
மாநில அளவிலான கால்பந்து போட்டி இன்று தொடக்கம் - தஞ்சாவூர்
தஞ்சாவூர்: 16ஆவது மாநில அளவிலான கால்பந்து தொடர் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
அந்தவகையில், 16ஆவது மாநில அளவிலான கால்பந்து தொடர் அதிராம்பட்டினத்தில் இன்று தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அணி, மனச்சை அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
மேலும், இந்தத் தொடரில், மதுரை, திருச்சி, சென்னை, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கால்பந்து அணிகள் கலந்து கொள்ள உள்ளனர். வெற்றிபெறும் அணிகளுக்கு அதிராம்பட்டினம் கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பரிசுத்தொகை, கோப்பைகள் வழங்கப்படவுள்ளன.