தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை பெரிய கோவிலில் பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு! - இலங்கை குண்டுவெடிப்பு

தஞ்சாவூர்: பெரிய கோயிலில் காவல்துறையினரின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்

By

Published : May 3, 2019, 6:35 PM IST

Updated : May 3, 2019, 11:22 PM IST

இலங்கையில் தேவாலயம், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், புராதான சின்னங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சை பெரிய கோவிலில் பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு

மேலும், தஞ்சை பெரிய கோவிலுக்கு வெளிநாட்டினர் உட்பட பலரும் வந்து செல்வதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ஆய்வில் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் செயல்பாடுகள் முறையாக உள்ளதா, காட்சிகள் ஒழுங்காகப் பதிவு செய்யப்படுகிறதா, எவ்வளவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, மெட்டல் டிடெக்டர்கள் சரியாக வேலை செய்கிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

Last Updated : May 3, 2019, 11:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details