திருச்சி மாவட்டம் கல்லணையில் இன்று (ஜன.18) காலை 6 மணி நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் 9,925 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவேரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேட்டூரில் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர் இருப்பு 105.75 அடியாக உள்ளது. வினாடிக்கு 1,993 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.