தஞ்சாவூர்: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவின் கழிவறையை சுத்தம் செய்ய இன்று (டிசம்பர். 3) துப்புரவு தொழிலாளிகள் சென்றுள்ளனர். அப்போது கழிவறை தண்ணீர் தொட்டியில் தொப்புள் கொடியுடன் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது.
இதனைக்கண்ட துப்புரவு தொழிலாளர்கள், கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்ததனர். உடனடியாக கல்லூரி முதல்வர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் கபிலன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.