தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குவைத்தில் உயிரிழந்த தமிழர்! - குவைத்தில் உயிரிழந்த இந்தியர்

தஞ்சாவூர்: குவைத்தில் உயிரிழந்த திருநறையூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் உடலை, சொந்த ஊருக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயிரிழந்தவரின் பெற்றோர்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

 உயிரிழந்த நபர்
உயிரிழந்த நபர்

By

Published : Jun 3, 2020, 12:13 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், திருநறையூர் கிராமம், வடக்கு கட்டளைத் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக குவைத் நாட்டில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் மே மாதம் ஒன்றாம் தேதி உடல்நிலை சரியில்லாமல், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன் நேற்று முன் தினம் உயிரிழந்துவிட்டதாக பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இறந்த தனது மகனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details