தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நியாய விலைக் கடைகளில் வெங்காயம் விற்க வேண்டும்' - முத்தரசன் கோரிக்கை - அதிமுக செய்வது முறையற்ற செயல்

தஞ்சாவூர்: மத்திய, மாநில அரசுகள் வெங்காயத்தை இறக்குமதி செய்து நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்தார்.

mutharasan
mutharasan

By

Published : Dec 8, 2019, 11:47 PM IST

தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முத்தரசன், "ஆளும் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த விருப்பம் இல்லாத காரணத்தினால் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்காக குழப்பத்திற்கும் மேல் குழப்பத்தை செய்து கொண்டிருக்கிறது.

அதிமுகவிற்கு அச்சம் இல்லை என்று சொன்னால் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். உதாரணமாக, திருவிழாக் கூட்டத்தில் திருடன் திருடி விட்டு, திருடன் ஓடுகிறான் ஓடுகிறான் என்று கூறுவது போல ஒரு நிலைமையைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

ரஜினிகாந்த் மிகச்சிறந்த நடிகர். நான் அவரது ரசிகன். அவர் கட்சித் தொடங்கி கொடியை அறிவிக்கட்டும். பிறகு பார்க்கலாம். வெங்காயத்தை முன்பு அரிவாள்மனையால் அரிந்தால் தான் கண்களில் கண்ணீர் வரும். ஆனால், தற்போது வெங்காய விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாங்கள் வெங்காயம் சாப்பிட மாட்டோம். பூண்டு தான் சாப்பிடுவோம் என தன் குடும்பத்தைப் பற்றி கூறுகிறார். ஆனால் சூத்திர மக்கள் வெங்காயத்தைத் தான் அதிகம் சாப்பிடுவார்கள். அதைப்பற்றி அறியாமல் பேசுகிறார்.

செய்தியாளர் சந்திப்பில் முத்தரசன்

மத்திய, மாநில அரசுகள் வெங்காயத்தை இறக்குமதி செய்து நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: வெங்காயத்தால் 3 மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்துள்ளது - வைகோ

ABOUT THE AUTHOR

...view details