தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு, அரசு பள்ளி மாணவர்களும், இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கமும், மாவட்ட குழந்தைகள் நல மருத்துவர் சங்கமும் இணைந்து இன்று உதவி பொருட்களை வழங்கினர்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு மருத்துவர்கள் உதவிக்கரம்! - thanjai school students
தஞ்சை: பட்டுக்கோட்டையில் இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் சார்பில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் பள்ளி புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதற்காக ரூ.2 லட்சம் ஒதிக்கீடு செய்து அதில் குழந்தைகள் படிப்புக்கு தேவையான புத்தகங்கள், அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அதிராம்பட்டினத்தில் உள்ள மூன்று அரசு பள்ளிகளுக்கு உயர்தர குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளும் வழங்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு குழந்தைகள் நல சங்க செயலாளர் டாக்டர். சுரேஷ்பாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த உதவிகளை வழங்கினார். மேலும் முன்னாள் தலைவர் டாக்டர். அன்பழகன் உட்பட ஏராளமான குழந்தை நல மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.