தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரிக்கை!

தஞ்சாவூர்: ராஜ ராஜ சோழனின் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழ் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என பெரிய கோயில் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

in-thanjai-big-temple-kudamuzhukku-should-conduct-in-tamil-language-says-temple-co-ordination-members
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரிக்கை!

By

Published : Dec 30, 2019, 3:16 PM IST


தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கு வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடத்த தமிழ்நாடு அரசு அறிவித்ததையடுத்து, நேற்று தஞ்சாவூரில் தஞ்சை பெரிய கோயில் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு பெரிய கோயில் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக பெ.மணியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், "தமிழ்நாடு மக்களின் விருப்பத்துக்கு இணங்க தமிழ் முறைப்படி இந்த குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். சமஸ்கிருத மொழிப்படி குடமுழுக்கு நடத்தக் கூடாது.

தமிழ் பழமையான மொழி மட்டுமல்ல ஆன்மீக மொழியும் கூட, எனவே தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜனவரி 23 அன்று தஞ்சையில் மிக பிரம்மாண்டமாக மாநாடு நடைபெறவுள்ளது" என தெரிவித்தார்.

பெரிய கோயில் ஒருகிணைப்பு குழுவின் பெ.மணியரசன் பெட்டி

இதையும் படியுங்க:

யூத கோயிலில் கத்திக்குத்து: 5 பேர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details