தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலினைப் போல் மிமிக்கிரி செய்த டிடிவி! தொண்டர்கள் ஆரவாரம்...

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் தேர்தல் பரப்புரையின் போது திமுக தலைவர் ஸ்டாலின் போல் மிமிக்ரி செய்து தினகரன் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் போல் மிமிக்ரி செய்த டிடிவி தினகரன்

By

Published : Apr 10, 2019, 10:30 PM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அம்மாவட்ட நாடாளுமன்ற அமமுக வேட்பாளர் முருகேசனை ஆதரித்து டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டர். அப்போது அவர் பேசுகையில், கருணாநிதியிலிருந்து ஸ்டாலின் வரை இந்துக்கடவுளை கொச்சை படுத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் இந்துக்கள் கிருஸ்தவ கோவிலுக்கும், முஸ்லிம்களின் தர்காகளுக்கும் சென்று வழிபட்டு வருகின்றனர். நானும் இந்த பகுதியை சேர்ந்தவன் எங்களுக்குள் எந்த விதமான மத பாகுபாடும் கிடையாது. முஸ்லிம்களின் விஷேசங்கள் என்றால் முதல் பத்திரிகையே எங்கள் குடும்பத்திற்கு தான் வரும். ஆனாலும் ஸ்டாலின் சமீப காலமாக தொடர்ந்து இந்து கடவுளை கொச்சை படுத்தி பேசிவிட்டு இப்போது நான் அப்படி பேசவில்லை என்று பயந்து அலறுகிறார் என்று ஸ்டாலின் பேசுவது போல மிமிக்கிரி செய்து கேலி செய்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் போல் மிமிக்ரி செய்த டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details