தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலாளர்களுக்குப் பாதப்பூஜைச் செய்த உரிமையாளர்: வீடியோ வைரல்!

தஞ்சாவூர்: தனது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிமையாளர் ஒருவர் பாதப்பூஜைச் செய்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

தொழிலாளர்களுக்கு பாதப்பூஜைச் செய்த உரிமையாளர்: வீடியோ வைரல்!
தொழிலாளர்களுக்கு பாதப்பூஜைச் செய்த உரிமையாளர்: வீடியோ வைரல்!

By

Published : Apr 2, 2020, 4:05 PM IST

கரோனா வைரஸ் எதிரொலியால், நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரவலைக் கட்டுப்படுத்த, மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வெளியில் வரக்கூடாது என அறிவிறுத்தப்பட்டுள்ளது.

இதில் மருத்துவர்கள், செவிலியர், தூய்மை பணியாளர்கள் உள்ளிடோர் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர். இந்த நேரத்தில் மருத்துவர்கள் எப்படி கரோனாவுக்கு வைத்தியம் பார்க்கிறார்களோ அதுபோல் ஒவ்வொருவருக்கும் பசி அடங்குவதற்கு உணவு முக்கியம். அந்த உணவிற்கு சமையல் எரிவாயு எவ்வளவு முக்கியம்.

அந்த சமையல் எரிவாயு சிலிண்டரை வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு கொண்டு போய் சேர்த்து கொண்டிருக்கின்ற நிறுவன ஊழியர்கள் முக்கியம். இந்த ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தஞ்சாவூர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர், அவருடைய தொழிலாளர்களை கடவுளாக நினைத்து, பாதபூஜை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர்களுக்கு பாதப்பூஜைச் செய்த உரிமையாளர்: வீடியோ வைரல்!

இதையும் படிங்க...தப்லிஹி மாநாட்டில் பங்கேற்றவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும்

ABOUT THE AUTHOR

...view details