தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள சரகம் கோவில்பத்து கிராம வில்வராயன்பட்டி புது காலனி தெருவில் பிறந்து இரண்டு மூன்று தினங்கள் ஆன ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது. தெரு ஓரத்தில் கிடந்த அக்குழந்தையை கிராம மக்கள் இன்று (அக்.16) காலை சுமார் ஏழு மணியளவில் மீட்டனர்.
தஞ்சாவூரில் பிறந்து மூன்று நாளே ஆன குழந்தை உயிருடன் மீட்பு! - In Tanjore child recovered from street
தஞ்சாவூர்: பூதலூர் அருகே முட்புதரின் ஓரத்தில் பிறந்து மூன்று நாளே ஆன குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் பிறந்த மூன்று நாளே ஆன குழந்தை உயிருடன் மீட்பு!
இதனையடுத்து கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயசந்திரன் சம்பவ இடத்திற்குச் சென்று குழந்தையை மீட்டு, பூதலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். மேலும், இதுகுறித்து விசாரிக்க சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க...கரோனா நிலவரம்: குறைந்து வரும் உயிரிழப்புகள்!