தஞ்சாவூர்:தைப்பொங்கலையொட்டி (Pongal Festival) தமிழ்நாடு முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடந்தது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கொல்லங்கரை கிராமத்தில் தமிழ் நூல்களைப் பாடி பொங்கல் தினத்தை கொண்டாடினர்.
'தேவாரம்', '12 சைவத் திருமுறைகள் நூல்'களை பாதுகாக்கும் வகையில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கிராமத்திலுள்ள பெரியவர்கள், இளைஞர்கள் ஆகியோர் மார்கழி மாதம் முழுவதும் தேவாரம் பாடல்கள் பாடி கிராமத்தைச் சுற்றி வலம் வந்த தமிழ்மறை நூல்களைப் பாடினர்.